பன்னீர் பாயாசம்
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 200 கிராம்
பால் – 1 லிட்டர்
ஏலக்காய் – 10
முந்திரி – 4 டேபிள்ஸ்பூன்
திராட்சை – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
பேரிச்சம்பழம் – 50 கிராம்
பிஸ்தா – 4
பாதாம் பருப்பு – 3
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் நெய் சேர்த்து, முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி, அதில் நறுக்கிய பன்னீர், பேரிச்சம்பழம், ஏலக்காய் மற்றும் சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். பின் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறிவிட்டு பாதாம் பருப்பு, பிஸ்தாவை தூவிவிட்டு இறக்கினால் பன்னீர் பாயாசம் தயார் !!!