Categories
மாநில செய்திகள்

பீதியை கிளப்பும் புதிய வகை கொரோனா… ஆபத்தானதா..? சுகாதாரத் துறையின் கருத்து என்ன..?

புதிய கொரோனா குறித்து வெளியாகும் தகவலைப் பற்றி தமிழக சுகாதாரத் துறை தற்போது விளக்கமளித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த 10 மாதங்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரசை விட வேகமாக பரவும் வகையில் புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றமடைந்த புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுவதால், இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்தை நிறுத்தி விட்டது. பல்வேறு நாடுகள் உடனான தரைவழி போக்குவரத்து மற்றும் எல்லைகளை மூடிவிட்டது. இந்தியாவும் இன்று முதல் 31ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இங்கிலாந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகளுக்கு நான்கு நாட்கள் முன்னர் ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு நுழைய முடியும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பரவிவரும் இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த வகையில் இந்த வைரஸ் ஆனது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை கூறியதாவது: ஒரு வைரஸ் உரு மாற்றம் பெறுவது இயல்பான ஒன்றுதான். இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று கூறுகிறது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது புதிய வகை கொரோனா வைரஸ் அல்ல. கொரோனா மரபியல் மாற்றம் மட்டுமே அடைந்துள்ளது என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் ஆனது 17 முறை மரபியல் ரீதியாக மாற்றம் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது. கண்டறியப்பட்ட தடுப்பூசிகளும் ஏற்கனவே உள்ள தடுப்பு மருந்துகளும் இதற்குப் போதுமானது என இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றைக் கடைப் பிடித்தாலே கொரோனா மட்டுமின்றி எளிதில் பரவக்கூடிய எந்த வகை நோய் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |