Categories
உலக செய்திகள்

பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கத்தில்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

சிறுவன் பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுன்டியில் டாம்வொர்த் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள A5 சாலையில் ஸ்னோடோம் என்ற உட்புற பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கம் ஒன்று உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.40 மணியளவில் West Midlands அவசர சேவை மற்றும் Staffordshire காவல்நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் விரைவாக அங்கு சென்ற போது 12 வயது சிறுவன் ஒருவன் பனிச்சறுக்கிலிருந்து கீழே தவறி விழுந்துள்ளான் என்று தெரியவந்துள்ளது. இதனால் சிறுவனின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அவசர சேவையில் இருக்கும் துணை மருத்துவர்கள் அவனுக்கு CPR போன்ற முதலுதவிகளை செய்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரத்திலேயே சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளான்.

மேலும் சிறுவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும் அவன் உயிருக்கு போராடும் நிலையை கண்டுள்ளனர். இந்த விபத்தில் மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளார். அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஸ்னோடோம் பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு புகைப்படங்களையும் காணொளி காட்சிகளையும்  சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று காவல்துறையினர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |