Categories
உலக செய்திகள்

பணியிலிருந்து ஓய்வு பெறும் பூனை.. சோகத்தில் சக பணியாளர்கள்..!!

இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றி வந்த பூனையின் ஓய்வு அலுவலக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பால்மர்ஸ்டன் என்ற பூனை பணியாற்றி வந்தது. எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அந்த பூனை தற்போது ஓய்வு பெறுவது அலுவலக பணியாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்மர்ஸ்டன் பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் பூனையின் சார்பாக பதவி விலகல் கடிதம் பதிவிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், நான்கு ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து வந்ததாகவும், தற்போது ஓய்வு பெறக்கூடிய நேரம் வந்துவிட்டதாகவும், அதனால் பணியில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அலுவலகத்தில் தனது பணி முடிவடைந்தாலும், எப்போதும் இங்கிலாந்தின் தூதராக இருப்பேன் என்றும் பால்மர்ஸ்டன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பால்மர்ஸ்டன் பூனையின் டுவிட்டர் பக்கத்தை ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |