பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குளிரும், பனிப்பொழிவும் அதிக அளவில் இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதிகளில் அருகில் இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு கொட்டியது. இதனால் கார், லாரி மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் பனி படர்ந்து இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து வாகனங்களில் ஒய்பைர் போட்டபடி ஓட்டுநர்கள் சென்றுள்ளனர். இதில் ஒரு சிலர் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றுள்ளனர். பின்னர் பாணாவரம் பகுதியில் இருக்கும் ரயில்வே மேம்பால சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் ரயில்வே நிலையத்தில் நடுங்கும் குளிரிலும், பனியிலும் பயணிகள் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் இருந்து சென்னையை நோக்கி சென்ற ஏலகிரி விரைவு ரயில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சோளிங்கர் ரயில் நிலையத்தை வந்தடைந்ததுள்ளது.