கடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவில் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவால் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் டெக்ஸாஸ், மிசௌரி, லூசியானா, கென்டக்கி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீசும் கடுமையான பனிப்புயலால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக தண்ணீர் குழாய்கள் பனியில் உறைந்ததால் பல பகுதிகளில் உள்ள மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர் . இந்த பனிப்பொழிவால் தடுப்பூசி மையமும் மூடப்பட்டுள்ளது . இதனால் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பனிப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளதாக ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.