Categories
உலக செய்திகள்

உருகும் பனிப்பாறைகள்…. வெளிவரும் ஆபத்தான பொருட்கள்…. திடுக்கிடும் ஆய்வின் தகவல்கள்….!!

பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்கிருமிகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நம் புவியானது வெகுவாக வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களும் நுண்கிருமிகளும் வெளிவரும் என்று ஆய்வின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஆர்டிக் பகுதியில் இருக்கும் பனிபாறைகள் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்டவை.

மேலும் அவை சுமார் பத்து லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புவி வெகுவாக வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து பனிப்போரில் பயன்படுத்தப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், அணுஉலைகள் சுரங்கங்களில் ஏற்பட்ட சேதங்கள் போன்றவை வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகமாக உமிழப்படுவதற்கு பெர்மா ஃப்ரோஸ்ட் என்றழைக்கப்படும் நிரந்தர பனிப்படலங்கள் சீர்குலைந்து உருகுவது தான் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. இதன் பாதிப்பானது குறைந்த அளவே இருக்கும் என்றாலும் அணுக்கழிவுகள் கதிர்வீச்சு, கண்டறியப்படாத வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் விஷத் தன்மையுடைய வேதிப்பொருட்கள் வெளியே வரும்” என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |