Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் போட்ட உத்தரவு…. பாராட்டி தள்ளிய ஓ.பி.எஸ்…. மக்களுக்கு அட்வைஸ்…!!

கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இருவார முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஓ.பன்னிர்செல்வம் கூறியுள்ளார். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதிருப்பதற்கும், டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதற்கும் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு என்பதாலும், நேற்றும், இன்றும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதலை தவிர்த்து, சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் பன்னீர்செல்வம் அறிவுறித்தியுள்ளார். தமிழக அரசின் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக மக்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |