தேவையான பொருட்கள்
பொரிகடலை – 1/2 கிலோ
தேங்காய் – 1
சீனி – 250 கிராம்
முந்திரி – 100 கிராம்
ஏலக்காய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு – 1/2 கிலோ
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் பாதித் தேங்காயை துருவி கொண்டு பாதி தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
- அடுத்ததாக பொரிகடலை சிறிது பொடித்துக்கொள்ளவும்.
- சீனியை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் நெய் விட்டு அதில் முந்திரியை போட்டு நன்றாக வறுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- பாத்திரம் ஒன்றில் மைதாமாவு, தேங்காய்பால், தேவைக்கேற்ப உப்பு, சீனி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதம் வரும் வரை நன்றாக கரைத்துக்கொள்ளவும்.
- அதனுடன் துருவி வைத்துள்ள தேங்காயும் பொடித்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து மேலும் கலக்கவும்.
- பின்னர் கலவையுடன் வெட்டி வைத்துள்ள முந்திரி பொடியாக்கி வைத்துள்ள சீனி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
- ஒரு மணி நேரம் காத்திருந்து சிறிய உருண்டைகளாக பிடித்து மைதா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- பொரிகடலை பணியாரம் தயார்.