Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பனியன் நிறுவன மேலாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பனியன் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலைபாளையம் பகுதியில் திருலோகசந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.  இவருக்கு சொர்ண பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சொர்ண பாக்கியத்தின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவ செலவிற்காக திருலோகச்சந்தர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சொர்ண பாக்கியத்தின் தந்தை பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனால் சொர்ணபாக்கியம் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த சொர்ண பாக்கியம் திருலோகச்சந்தர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருலோகசந்தரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |