Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வியாபாரியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழில் நஷ்டத்தால் பனியன் வியாபாரி வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைப்புதூர் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண் ஒருவரின் உடல் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் வேலம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் பனியன் வியாபாரியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஆனந்தகுமாருக்கு கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. மேலும் ஆனந்தகுமார் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி ராஜகுமாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |