Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 63 குண்டுகள்…. பணியில் மறைந்தவர்களுக்கு அஞ்சலி…. அதிகாரிகளின் உறுதிமொழி….!!

பணியின் போது உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமாக பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வருடம் தோறும் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக இம்மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இருக்கும் ராணுவ நினைவுத்தூண் முன்பாக வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இவற்றில் இம்மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பணியின் போது வீர மரணம் அடைந்த 377 காவல்துறையினரின் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பணிக் காலத்தில் வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கும் மற்றும் கொரோனா நோயால் உயிரிழந்த காவல்துறையினருக்கும் ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் 63 குண்டுகள் முழங்க வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் வீர, தீர செயல்களில் ஈடுபட்டும் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டும் உயிரிழந்த காவல்துறையினர் நினைவு கூறப்பட்டிருக்கின்றது.

அதற்கு பிறகு காவல்துறையினர் கடற்கரைனாலும் மற்றும் பனிமலை சிகரமானலும் காவலர் பணி இடர் நிறைந்திருக்கிறது. அதன்பின் உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடிய தயார் என்று கூறி இந்த வருடமும் இந்தியாவில் பல பகுதிகளில் உயிரிழந்த 377 காவல்துறையினர் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு அவர்களின் வீரத் தியாகம் வீண் போகாது என்று அனைத்து காவல்துறையினரும் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

Categories

Tech |