பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனிடையே வருகின்ற 2022 ஆண்டிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் பிசிசிஐ அறிவித்திருந்தது .அதன்படி சமீபத்தில் நடந்த இரண்டு புதிய அணிகளுக்கான இயக்கத்தில் லக்னோ , அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாக வைத்து புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அணி வீரர்களுக்கான ஏலமும் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான கே.எல். ராகுல் பஞ்சாப் அணியில் தொடர்வாரா கேள்வி எழுந்தது.
இதுகுறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கூறும்போது,” தற்போது எங்கள் அணியில் தக்கவைக்க போகும் வீரர்களை குறித்து நாங்கள் ஆலோசித்து வருகின்றோம் . கே.எல்.ராகுலை தக்க வைத்தால் மட்டும் போதாது .அணியில் இடம்பெறும் 11 வீரர்களும் சிறப்பாக விளையாடினால் தான் வெற்றி பெற முடியும்.அதோடு ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு கேரக்டர் உண்டு .மேலும் எங்களுடைய அணியில் கே.எல்.ராகுல் தக்கவைக்கபடுவார் என்பதில் சந்தேகமில்லை .அதோடு மற்ற வீரர்களையும் யோசிக்கவேண்டும் .ஒரு வீரரை மட்டும் வைத்து கிரிக்கெட்டை விளையாட முடியாது .எனவே மீதமுள்ள வீரர்களையும் நாங்கள் யோசித்து வருகிறோம் .இதனால் நிச்சயம் அடுத்த சீசனில் சிறப்பான அணி அமையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. என்ன நடந்தாலும் அதனை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.