சிஎஸ்கே -பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
நேற்று மும்பையில் வான்கடே மைதானத்தில், நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் தொடக்கத்திலிருந்தே ,பஞ்சாப் அணியின் ரன் எடுக்க விடாமல் சிஎஸ்கே அணி சிறப்பாக பவுலிங் செய்தது.
குறிப்பாக சிஎஸ்கே அணியில் தீபக் சாஹரின் பவுலிங் , பஞ்சாப் அணியை திக்குமுக்காட செய்தது. எனவே பஞ்சாப் அணி 6.2 ஓவரிலேயே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ,ரன்களை எடுக்க தடுமாறியது. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி இறுதியாக 107 ரன்களை எடுத்தது .இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ,சிஎஸ்கே வெற்றியை சுலபமாக கைப்பற்றியது.