பஞ்சாலை எந்திரத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணபிரான் என்ற மகன் உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் கழிவு பனியன்களிலிருந்து பஞ்சு தயாரிக்கும் எந்திரம் வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் பஞ்சு தயாரிக்கும் இயந்திரங்கள் 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென மோட்டார் ஆயில் சீல் உடைந்து பஞ்சு கழிவு எந்திரங்களில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து கண்ணபிரான் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 7 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் சேதமடைந்தது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து நாசமானது. ஆனால் இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.