பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பூமலூர் ஊராட்சி-மேட்டுப்பாளையம் பகுதியில் பார்வதி என்பவருக்கு சொந்தமான பனியன் கழிவுதுணிகள் குடோன் அமைந்துள்ளது. அங்கு முகமதுரூமி என்பவர் பனியன் கழிவுகளை அரைத்து பஞ்சாக்கும் மில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கழிவுகளை அரைத்து பஞ்சாக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனையடுத்து சற்றுநேரத்தில் எந்திரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து வேலை பார்த்துக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் உரிமையாளர், மங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.