அதிமுக மாவட்ட செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல். சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் பழனிச்சாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் என்று நத்தம் விஸ்வநாதன் பேச்சு. ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க கூடாது என்று எடப்பாடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.