திடீரென மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் புதூர் பகுதியில் கணேசன் மகன் செல்வம் வசித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பந்தல் அமைப்பதற்கு உதவியாக நின்று கொண்டிருந்த செல்வம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதனால் துடிதுடித்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.