இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து பேசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரரான கேப்டன் தோனியை குறித்து அவர் பேசியுள்ளார். அதில் தோனியின் கேப்டன்சியில் முக்கியமான ஒன்று எதுவென்றால் அவர் பந்துவீச்சாளர்களை நம்புவார். பந்துவீச்சாளர்களை பில்டிங் செய்வதற்கு அனுமதிப்பார். ஒருவேளை தவறாக இருந்தால் நான் பில்டிங்கை மாற்றட்டுமா என்று அவரே மாற்றி அமைப்பர்.
சில சமயம் நல்ல பந்து கூட சிக்ஸராக பறக்கும் இருப்பினும் அப்போதும் அவர் கைப்பற்றி பந்து வீச்சாளரை பாராட்டுவார்.” சிக்ஸர் போனது முக்கியமல்ல. நீங்கள் வீசிய பந்து நல்லது. அந்தப் பண்ணை சிக்ஸர் அடிக்கும் அளவிற்கு பேட்ஸ்மேன் திறமையாக உள்ளார்.” எனக் கூறுவார். எப்பொழுதுமே டோனி நிதானமாகவே இருப்பார். நல்ல கேப்டனுக்கு அது அவசியம் தேவை. எப்பொழுதுமே சீனியர் வீரர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பவர் தோணி என தெரிவித்துள்ளார்.