மேல் நாட்டவர்கள் நம் நாட்டில் வந்து விளைவித்த பழம்தான் பப்பாளி பழம். பப்பாளி பழத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம் அது பலர் அறிந்ததும் சிலர் அறியாததும்.
- இளம் வயதினர் வயதான முக தோற்றத்தால் மிகவும் கவலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் பப்பாளி பழத்தையும் தேனையும் கலந்து முகத்தில் பூசி வர தோலில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
- அதிகம் பதற்றம் கொள்பவர்களும் நரம்பியல் பாதிப்பு இருப்பவர்களும் அதிகம் நரம்புத்தளர்ச்சி பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். அவர்கள் பப்பாளி பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் நரம்புத் தளர்ச்சியில் இருந்து விடுபடலாம்.
- கிருமிகளால் நோய் தொற்று ஏற்படாமலிருக்க வாரத்தில் இரண்டு முறை பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் பப்பாளி பழத்தை உண்டு வருவதனால் தீர்வு கிடைக்கப்பெறும்.
- பொட்டாசியம் சத்து நிறைந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதனால் ரத்த அழுத்தத்தை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- நமது கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தங்குவதால் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கத்தை சரி செய்ய முடியும்.