பப்பாளி தோசை
தேவையான பொருட்கள் :
தோசை மாவு இரண்டு கப்
பப்பாளிப்பழத் துண்டுகள் 2 கப்
பச்சை மிளகாய் 5
வெங்காயம் 2 (நறுக்கியது)
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
பப்பாளி தோசை செய்வதற்கு முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, தோசை மாவில் கலந்து தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
கலர்புல்லான பப்பாளி தோசை ரெடி.