Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட முடியவில்லை…. ஏக்கத்தில் சிறுவன் தற்கொலை….!!

திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாடும் ஏக்கத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிஸ்லாபட்டு அடுத்த ஓமகுப்பம் கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்த திரு. மூர்த்தி என்பவரின் மகன் தினேஷ்குமார் உயிரிழந்த மாணவன் ஆவான். மிட்டூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தினேஷ்குமார் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பஜ்ஜி கேம் விளையாடி வந்ததை பார்த்துள்ளான். இதனைக் கண்ட தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளான். விவசாய கூலி தொழிலாளியான பெற்றோர்களால் செல்போன் வாங்கித் தர முடியாத நிலை இருந்துள்ளது.

இந்த நிலையில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சக நண்பர்களிடம் அமர்ந்து கொண்டு ரசித்ததோடு விளையாடவும் ஆசைப்பட்டு நண்பர்களிடம் செல்போன் கேட்டதாக தெரிகிறது.  தினேஷ்குமார் விளையாட யாரும் செல்போன் தராததால் தான் பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் வீட்டிற்கு சென்று தாயின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கிரிஸ்லாபட்டு போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |