வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள பப்பாளியை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், மெட்ராத்தி, தாந்தோணி, ஜோதம்பட்டி, மைவாடி பகுதியில் அதிக அளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பப்பாளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் பப்பாளி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோடை காலத்தில் மட்டும் இல்லாமல் எந்த காலத்திற்கும் ஏற்ற அதிக சத்துள்ள பப்பாளியை விவசாயிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பப்பாளி செடி வளர்வதற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால் சொட்டுநீர் பாசனம் மூலம் அதனை வளர்த்து சாகுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த பகுதியில் தொடர்ந்து எட்டு மாதங்கள் வரை வட்ட பாத்தி கட்டுதல், களர் எடுத்தல் போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, ஒவ்வொரு பப்பாளி மரங்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பப்பாளி செடிகளை பராமரிப்பதற்காக 30000 முதல் 40000 வரை செலவாகிய நிலையில் ஒரு கிலோ பப்பாளி 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.