Categories
தேசிய செய்திகள்

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு மருந்துகளுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதில் 12 வகை மருந்துகள் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லை என்றால் தட்டுப்பாடு ஏற்படும் என மருத்துவ குழு கூறியிருந்தது.

இதில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளாக குளோரோம் பெனிக்கல், மெட்ரோனிடேஷில், சிலிடோ அமிசின் மற்றும் விட்டமின் மாத்திரை ஆகியவற்றின் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் பெண்கள் பிரசவ காலத்திலும், மாதவிடாய் காலத்திலும் பயன்படுத்தும் ஹார்மோன் மாத்திரைகளான புரோகெஸ்ட்ரோன் மருந்துகளின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி பாதிப்பால் வலி நிவாரணியாக பயன்படும் புரூபன், காய்ச்சல் தலைவலிக்கு பயன்படுத்தும் பாரசிட்டமால், உயர் ரத்த அழுத்த மருந்தான டெல்மிசார்டான், நோய் எதிர்ப்பு மருந்துகளான சென்டாமைசின்சல்பேட், டிரைஹைட்டேட் போன்ற மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் இன்று பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |