பறக்கும் விமானம் ஒன்றில் 11 வயது சிறுவனை நாடாவால் கட்டி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஓன்று கடந்த 10 ஆம் தேதி மாயியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளது. அந்த விமானத்தில் 11 வயது சிறுவன் தனது தாயாருடன் பயணம் செய்துள்ளான். இந்நிலையில் அச்சிறுவன் பறக்கின்ற விமானத்தில் அவனுடைய தாயாருக்கும், பயணம் செய்யும் பயணிகளுக்கும் இடைஞ்சல்கள் பல கொடுத்துள்ளான். இதனால் பயணிகள் சிலர் சிறுவனை அமைதிப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் சிறுவன் அமைதியாகாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனை தொடர்ந்து பயணிகள் இருவர் சிறுவனை பிடித்து இருக்கையுடன் சேர்த்து வலுக்கட்டாயமாக நாடாவால் கட்டி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் விமானப் பயணிகளிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாகம் கூறுவதாவது ” சிறுவன் லேசான கயிறு கொண்டு தான் பிணைக்கப்பட்டுள்ளான். மேலும் அந்த சிறுவனால் ஏற்பட்ட குழப்பத்தினால் விமானம் Honolulu பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சில பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனால் சிறுவனால் ஏற்பட்ட பாதிப்பிற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்” என விளக்கமளித்துள்ளது.