உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 1,63,000 ரூபாயை எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் கூட்ரோடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 1,63,500 ரூபாயை ரேவாட்சிங் என்ற வாலிபர் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அலுவலர் துரைசாமியிடம் ஒப்படைத்துள்ளனர்.