பயிற்சி ஆட்டத்தின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சிக்சர்களை அடித்து விளாசும் வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது .
ஐபிஎல் 2021 சீசனில் இரண்டாவது பாதி ஆட்டம் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதனால் இப்போட்டியில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
All arealayum Thala…🥳#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/Zu85aNrRQj
— Chennai Super Kings (@ChennaiIPL) September 18, 2021
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சி ஆட்டத்தின் போது சிக்சர்களை அடித்து விளாசும் வீடியோவை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு சீசனில் முதல் பாதி ஆட்டத்தில் கேப்டன் தோனி ரன் குவிக்க நிலையில் ,தற்போது பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி வருகிறார் .இதனால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது