Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டம்” பராமரிப்பு பணிகள் தொடக்கம்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஈரோடு பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பழைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியிருக்கின்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தி ரோடு பகுதியில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் சத்தி ரோடு பகுதியில் இருக்கும் பழைய கட்டிடத்தை அகற்றுவதற்கான பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்தனர். இதனையொட்டி அந்தக் கட்டிடத்தில் இயங்கி வந்த டீ, பழக்கடைகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடையில் இருந்த நாற்காலிகள், விளம்பர பலகைகள், ஏ.சி. மின்விசிறி போன்ற பொருட்களை எடுத்து சென்றனர். இதனையடுத்து கடைகளில் உள்ள ஷட்டர்கள் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் மாநகராட்சி சார்பாக பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சத்தி ஈரோடு பகுதியில் உள்ள கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. அந்த கட்டிடத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவைகள் எடுத்து அகற்றப்பட இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக கட்டிடங்களை இடிக்கும் வேலைகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Categories

Tech |