Categories
உலக செய்திகள்

பெண்ணின் அட்டகாசங்கள்…. காயமடைந்த விமான ஊழியர்கள்…. கைது செய்த போலீசார்…!!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமான ஊழியர்களை தாக்கிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்வீடன் நாட்டின்  தலைநகரான ஸ்டாக்ஹோமில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து சூரிச் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது . இந்த விமானத்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் விமான ஊழியர்களின் அறிவுரைகளை மீறி அவர்களை தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் எல்லை மீறயதால் அதே விமானத்தில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளார்.

மேலும் விமானம்  சூரிச் நகரில் தரையிறங்கியவுடன் தயார் நிலையில் இருந்த பெண் போலீசார் ஒருவர் அந்த பெண்ணை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்மணி அவரை கையில் கடித்துள்ளார். இதனை அடுத்து 28  வயதான அந்த பெண்ணின் மீது சட்ட விதிமீறல், வன்முறை மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளின் கீழ் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |