Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம்” எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்…. 2-வது முறை தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தின் போது பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பொதுமக்கள் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் உள்ள கிராம மக்கள் தினந்தோறும் இரவு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த 67 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவின் போது நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் பரந்தூர் விமான நிலையம் வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும்‌ புதிதாக வரவிருக்கும் விமான நிலையத்தால் விவசாய நிலங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |