Categories
விளையாட்டு

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் : இறுதிப்போட்டியில் ஐஏஎஸ் அதிகாரி சுகாஷ் யத்திராஜ் … வெள்ளி வென்று அசத்தல் ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஐஏஎஸ் அதிகாரியான இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் .

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டண்  இறுதிப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்  சுகாஷ் யத்திராஜ் ,பிரான்ஸ் வீரரான மசூர் லூகாஸை எதிர்கொண்டார்.

இதில் 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் சுகாஷ் யத்திராஜை வீழ்த்திய மசூர் லூகாஸ் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் .இதனால் இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Categories

Tech |