சுமார் 11 நிமிடங்கள் விண்ணிலிருந்த அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி உட்பட 4 பேரும் பேராஷூட்டின் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளார்கள்.
ப்ளூ ஆரிஜின் நிறுவனம் நிலவிற்கு மனிதர்கள் சென்று வந்ததன் 50 ஆவது ஆண்டை கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி உட்பட 4 பேர் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் என்னும் ராக்கெட்டின் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்கள்.
இதனையடுத்து விண்வெளியில் சுமார் 11 நிமிடங்கள் இருந்த அமேசான் நிறுவனத்தின் முன்னாள் செயலதிகாரி உட்பட 4 பேரும் பேராஷூட்டின் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளார்கள்.