பாரதிராஜா மற்றும் அவரது தலைமையிலான தயாரிப்பாளர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பதிவு துறை தலைவரிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.
தயாரிப்பாளரும், இயக்குனருமான பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதற்கான உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சில தயாரிப்பாளர்கள் தற்போது உள்ள சங்கத்தை பிளவுபடுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் உருவாவதற்கு காரணமான அனைத்து தயாரிப்பாளர்கள் மீதும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி சேகரன் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, கே ராஜன், கமீலா நாசர், ஆகியோர் உடன் இருந்தனர்.