வனப்பகுதியில் யானைகள் தனது குட்டிகளுடன் குட்டையில் இறங்கி குளித்து மகிழ்ந்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, ஜீர்பள்ளி, சத்தியமங்கலம் போன்ற 10 வனச்சரகங்கள் இருக்கின்றன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, புலி போன்ற பெரும்பாலான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
எனவே தற்போது வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து இருப்பதனால் செடி, கொடிகள் துளிர்விட்டு பசுமையாக இருக்கின்றது. மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் சீக்கிரமாக நிரம்பி இருப்பதனால் யானைகள் தண்ணீரை தேடி வரத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கடம்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள குட்டைக்கு யானைகள் குட்டிகளுடன் வந்து அதில் இறங்கி குளித்து மகிழ்ந்தது. இவ்வாறு யானைகள் சுமார் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக குளித்து மகிழ்ந்து பின் வனப்பகுதிக்கு சென்றது.