Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு…. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

சங்கரன்கோவிலில் சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கக்கன் நகரில் வசிக்கும் தம்பதிகள் ஜெபஸ்டின் – அருள் மேரி. இவர்களுடைய மகன் ஆரோன் (வயது 2). இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோனை காணவில்லை என்று அந்த பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த வர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் சிறுவன் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்துள்ளான்.

இதையடுத்து அலற பெற்றோர் உடனே சிறுவனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் சிறுவனின் பெற்றோருடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |