Categories
தேசிய செய்திகள்

இது போதாது… இன்னும் எங்களுக்கு வேணும்! கர்ப்பமான சிறுமியை வைத்து பேரம் பேசிய பெற்றோர்!

குஜராத்தில் 17 வயது சொந்த மகளை ரூ. 50,000க்கு பெற்றோர் விற்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ஷினோர்  என்ற பகுதியில் 17 வயதுடைய  சிறுமி ஒருவர் விகாஸ் வாசவா என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால்  சிறுமியை அவரது பெற்றோர்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து, விகாஸ் வாசவாவிடம் ஒரு  ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

அதாவது ரூ. 50,000 க்கு சிறுமியை பேரம் பேசியுள்ளனர். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்காமல் தனக்கு பிடித்தவனுடனே செல்ல இருப்பதால் பெற்றோரின் ஒப்பந்தம் குறித்து கவலைபடவில்லை.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் உறவினருக்கு தெரியவந்ததை  அடுத்து  சிறுமியின் பெற்றோரிடம், ரூ.50,000  ரொம்ப கம்மியா இருக்கு..  என்றும், விகாஸிடம் ரூ.  5 லட்சம் கேளுங்கள்.. என்று  ஆலோசனை கூறியுள்ளனர்.  உறவினர்களின் பேச்சை கேட்டு சிறுமியின் பெற்றோரும் விகாஸிடம் 5 லட்சம் ரூபாய் தயங்காமல் கேட்டுள்ளனர். ஆனால் விகாஸ்  ‘நான்  ஒரு சாதாரண தொழிலாளி ‘ என்றும் என்னால் அவ்வளவு பெரிய தொகையை எல்லாம்  கொடுக்க முடியாது என்று  கூறியுள்ளார்.

ஆனால் சிறுமியின் பெற்றோர்  விடாப்பிடியாக 5 லட்சம் ரூபாய் தந்தே ஆக வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் விகாஸ்,  வேறு வழியின்றி சிறுமியை அவரது வீட்டிற்கே செல்லும் படி கூறியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த  சிறுமி தனது பெற்றோர் மீது போலீசில்  புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை  மேற்கொண்ட  காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர் மற்றும் விகாஸை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் கர்ப்பமாக   இருந்த  சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.

Categories

Tech |