சானிடைசர்கள் குழந்தைகளின் கண்களை பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரதாண்டவம் ஆடி வருகிறது. எனவே கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் தங்களை வாழ்க்கையில் அன்றாட ஒன்றாக இந்த பழக்கங்களை மாற்றி விட்டனர் இந்நிலையில் தன்னுடைய பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் அதில் நம்முடைய குழந்தையின் ஆரோக்யத்தை பாதிக்க கூடியதாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது.
கொரோனா பரவாமல் இருப்பதற்காக நம் கைகளில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசர் குழந்தைகளின் கண்களை பாதிக்கின்றன என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் முடியும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கும்போது, குழந்தைகளுக்கு அதனால் பாதிப்பு ஏற்படுவது பற்றியும் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நம்முடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்தால் அவர்களுக்கு சரியான வகையில் சானிடைசர் போட்டுக் கொள்ள சொல்லி கொடுக்க வேண்டும்.
நம் கண் முன்னாடி சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.
பொது இடங்களில் உள்ள இயந்திரங்களில் சானிடைசர் பயன்படுத்தும் போது நம்முடைய மேற்பார்வையில் அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகள் சானிடைசரால் சுத்தம் செய்த கைகளை பிறகு மீண்டும் தண்ணீரால் கழுவ வேண்டும்.
பார்வைக் கோளாறு இருந்தால் அவர்களை மூக்குக் கண்ணாடி அவசியம் அணிய சொல்ல வேண்டும். இதன் மூலம் அவருடைய கண் பாதுகாப்பில் இருந்து தப்பிக்க முடியும்.