Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே…”குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டாம்”… ஆபத்து அதிகம்..!!

குழந்தைகள் சாப்பிடும்போது அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக இந்த வகை உணவுகளை கொடுக்காதீர்கள்.

வளரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அம்மாக்கள் குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்பிய உணவுகளை கொடுத்து பழகுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது குறைவாகவே கிடைக்கும்.

சிப்ஸ் வகைகள்:

மறுக்காமல் குழந்தைகள் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் என்றால் அது சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு பொரியலை சாப்பிடுவதை விட இவ்வாறு சாப்பிடுவது தான் குழந்தைகள் விரும்புகின்றனர். இதில் சோடியம் அளவு கூடுதலாக உள்ளது.. கொழுப்பும் அதிக அளவு உள்ளது 50 முதல் 200 மில்லி கிராம் அளவுள்ள சோடியம் ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் உள்ளது. இவ்வாறு கொடுப்பதால் குழந்தைகளுக்கு மூளை, சிறுநீரகம், இதயங்கள் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றது.

நூடுல்ஸ் வகைகள்:

குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக அம்மாக்கள் சட்டென்று ரெடி பண்ணும் ஒரு ரெசிபி என்றால் அது நூடுல்ஸ் தான். அதில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு என்றாலும், அதில் ஸ்டார்ச் அதிக அளவு கொழுப்பும், சோடியமும் உள்ளது. இது அதிக அளவில் குழந்தைகள் சாப்பிடும் போது அவர்கள் உடம்பிற்கு கெடுதல் ஏற்படுகின்றது. எனவே இந்த வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுங்கள்.

பீட்சா

வெளியிடங்களில் வாங்கி சாப்பிடும் இந்த பீட்சா உணவுகள் அதிக அளவில் சோடியம் உள்ளது. ப்ரெட் துண்டுகளும், வெண்ணையும் கூட குழந்தைகளுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வகைதான். ரொட்டியில் ஏற்கனவே உப்பும் சர்க்கரையும் உண்டு. இது மேலே தடவும் வெண்ணை சோடியம் அளவை மேலும் அதிகரிப்பதால் இவ்வகை உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகளுக்கு குஷிதான். ஐஸ் கிரீம்களை பழங்களோடு கலந்து சாப்பிட தொடங்கி கேக் அளவில் தயாரிக்கப்படும் ஸ்பெஷல் ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதில் அதிக அளவில் கலோரி உள்ளதால் குழந்தைகளுக்கு இதை வாங்கி கொடுக்க வேண்டாம்.

பாப்கார்ன்

தியேட்டர்களுக்கு செல்லும் போது குழந்தைகளுக்கு பாப்கார்ன் வாங்கி கொடுப்பது வழக்கம். அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதை பொரிக்கும்போது வைட்டமின் பி1, பி5, சி பாஸ்பரஸ் மக்னீசியம் போன்றவை கிடைக்கும். இயற்கைக்கு மாறாக மைக்ரோ ஓவனில் இதை பொரிக்கும் பொழுது அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றது. இதை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு கொழுப்புச்சத்து உண்டாகின்றது.

இனிப்பு பொருட்கள்:

குழந்தைகளுக்கு சாக்லேட், லாலிபாப், மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளை அதிக அளவில் கொடுத்தால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் பற்களுக்கு இவை தீங்கானவை. இதை அதிக அளவில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Categories

Tech |