Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை நாடகமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையம் அருகே தொலைக்காட்சியை பார்க்கக் கூடாது என பெற்றோர் கண்டித்ததால் அவர்களது 13 வயது மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையத்தில் வசித்து வரும்  நெசவுத் தொழிலாளி ஏகாம்பரம்.

இவருக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களது மகன்களில் ஒருவரான  13 வயதாகும் ஜெயச்சந்திரன் அடிக்கடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருந்ததால் சிறுவனின்  பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் மனம்முடைந்த சிறுவன்  வீட்டில் இருந்த நெசவு நெய்யும் தொழிலுக்கு வைத்திருந்த கருவி மீது நின்று கொண்டு கழுத்தில் துணியை மாட்டிக் கொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நாடகமாடி பெற்றோரை அச்சுறுத்த முயன்றுள்ளார். அப்போது ஜெயச்சந்திரன் கால்  வழுக்கியத்தில் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த துணி கழுத்தை இறுக்கியது.

பின்னர் சிறுவனை  மீட்டு பெற்றோர்கள் உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் இறந்து விட்டதாக கூறினர்.  இந்தசம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு  அமலில் உள்ள நிலையில் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போனில் விளையாட அனுமதிக்கக்  வேண்டாம் என்று மனநல மருத்துவர்கள் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கியுள்ள நிலையில், தற்போது மாணவனின் உயிரை தொலைக்காட்சி பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காலகட்டத்தில் புத்தகம் படிப்பது,  நமது பாரம்பரிய விளையாட்டுகளை  கற்றுக்கொடுப்பது  உள்ளிட்ட நல்லொழுக்கங்களை சொல்லிக்கொடுப்பது அவசியம் என மனநல மருத்துவர்கள்  அறிவுரை கூறிவருகின்றனர்.

Categories

Tech |