குழந்தைகளை வெளியில் விடாமல் வைப்பதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் தற்போது குழந்தைகள் பள்ளிப் பருவத்திலேயே கண்களில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் வருகிறது. எனவே தற்போது குலந்திகளிடையே பார்வை குறைபாடு அதிகரித்துள்ளது. மேலும் எப்பொழுதும் தொலைக்காட்சி மற்றும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். இதனாலும் பார்வை குறைபாடு ஏற்படலாம். வீட்டுக்குள்ளேயே இருப்பதும், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பதாலும் தான் தற்போது(குறிப்பாக குலந்திகள் இடையே) பிரச்சினை அதிகரித்து வருவதற்கு காரணம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளிப்புற பகல் வெளிச்சத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் அது அவர்களின் பார்வையைப் பாதிக்கும் வீட்டுக்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்கும் பெற்றோர் இதை கவனிக்க வேண்டும். ஒரு மணி நேரமாவது உங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட விடுங்கள்.