Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் இல்லை…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள முத்தோரை பாலடாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இருக்கும் இந்த பள்ளியில் மாணவர்களுக்காக தங்கும் விடுதி, ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி இருக்கிறது. ஆனால் தேவையான அளவு தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போதிய அளவு தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் குழந்தைகளை எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |