பணம் தொடர்பாக குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
பணத்தை சரியாக கையாள்வது, நிர்வகிப்பது, சேமிப்பது,பணத்தை செலவு செய்வது போன்றவற்றை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் ஆகும். எனினும், நம்முடைய குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு பணம் சம்பந்தமாக சில விஷயங்களை கற்றுக்கொண்டுக்க வேண்டியது அவசியம். அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.
சேமிப்பு:
குழந்தைகள் கற்றுக்கொடுக்க வேண்டிய முதல் பழக்கமே சேமிப்புதான். குழந்தைகளுக்கு நாம் சம்பாதித்து கிடைக்கும் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் இளம் பருவத்திலேயே சேமித்து வைக்க கற்றுக்கொடுத்தால் எதிர்காலத்துக்கு அவர்கள் தயாராக வசதியாக இருக்கும்.
முதலீடு:
சேமிப்பின் பயனால் முதலீடு செய்ய முடியும். குறிப்பிட்ட வயது வராத சிறுவர்களின் பேரில் பெற்றோர் சில முதலீடுகளை செய்ய முடியும். இதுபோக, ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலக திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட், பத்திரங்கள் போன்றவை குறித்தும் குழந்தைகளுக்கு படம் கற்று கொடுக்க வேண்டும்.
குழந்தைகளிடம் தங்களிடம் இருக்கும் பணத்தை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். எனவே, பணத்தை வைத்து எப்படி பட்ஜெட் போடுவது என இளம் வயதிலேயே கற்றுக்கொண்டுக்கலாம். இதன் விளைவாக, பைனான்ஸ் குறித்த அறிவும் அவர்களுக்கு கூடும்.
வரி:
வரி குறித்த ஆழமான விஷயங்களை பற்றி அவர்களிடம் சொல்லி குழப்பிவிடாமல், வரி பற்றிய அடிப்படை தகவல்கள், வரி விதிக்கப்படுவதற்கான காரணம், வருமான வரி என்றால் என்ன போன்ற விஷயங்களை கற்றுக்கொண்டுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளும் சிறு வயதிலிருந்தே பணத்தின் தேவை குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.