ஏழு வருடங்கள் பெற்றோரால் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள் இருவர் மீட்கப்பட்டு சிறார் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்
ஸ்விட்சர்லாந்தின் சூரிச் பகுதியிலிருந்த குடியிருப்பில் ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு பிள்ளைகளை 2003ஆம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மிகவும் கொடுமை படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் ஏழு மற்றும் எட்டு வயதே நிரம்பிய தங்களது இரண்டு பிள்ளைகளையும் இரவு வேளைகளில் நர்சரியில் பூட்டி வைத்துள்ளனர். 2008 முதல் பகல் நேரத்திலும் குழந்தைகளை அறையில் வைத்து பூட்டி கூடியுள்ளனர். அதோடு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே கழிப்பறையை பயன்படுத்த குழந்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
தவறுதலாக தரையில் சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டால் அவர்களை வைத்தே சுத்தம் செய்துள்ளனர். தினமும் குறைந்த அளவே உணவு அளிக்கப்பட்டதால் இரண்டு குழந்தைகளும் மிகவும் எடை குறைவாகவே இருந்துள்ளனர். அதோடு அதிகப்படியான பசியினால் பள்ளியில் உணவை திருடும் சூழலுக்கும் குழந்தைகள் தள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் தான் எடுத்த வாந்தியை மகளிர் சாப்பிடப் வற்புறுத்தி குழந்தையின் தலையை அழுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சிறுமியை அவரது தந்தை ஒரு முறை கழிப்பறை கிண்ணத்தில் தள்ளி சுத்தப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் 2010ஆம் ஆண்டு அந்த பிள்ளைகள் மீட்கப்பட்டு உளவியல் சிகிச்சை கொடுக்கப்பட்ட பின்னர் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பல வருடங்கள் அவர்களுக்கு உளவியல் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொடும் செயலை செய்த பெற்றோர் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.