Categories
தேசிய செய்திகள்

காதலை எதிர்த்த பெற்றோர்… மகளையும் காதலனையும் கொடூரமாக எரித்துக் கொலை…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது மகளை அவரது காதலுடன் சேர்த்து எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த போலா மற்றும் பிரியங்கா என்ற இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சம்பவத்தன்று பிரியங்காவை அவரது வீட்டில் வைத்து போலா சந்தித்துள்ளார். இதனை அறிந்த பிரியங்காவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால் போலா மற்றும் பிரியங்கா இருவரும் தீயில் துடி துடித்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரியங்காவின் தந்தை, தாயார், சகோதரர், உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பிரியங்காவின் உறவினர்கள் மேலும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர். போலீஸ் விசாரணையில் போலா மற்றும் பிரியங்கா இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திர பி சவுகான் கூறும்போது, “பிரியங்காவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து முடிக்க அவரது பெற்றோர் முடிவெடுத்திருந்த நிலையில் போலாவும் பிரியங்காவும் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |