Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக… “5 பிள்ளைகளை பூமிக்கு அடியில்”… ஒரு அறையில் அடைத்து பட்டினி போட்டு கொடுமை…. கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

பத்து வருடங்களாக குழந்தைகளை பட்டினி போட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் பகுதியில் குடும்பம் ஒன்றில் 7 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் ஐந்து பேரை பெற்றோர் பல வருடங்களாக கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். தற்போது இது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் குழந்தைகளை வெகுநாட்களாக அந்தப் பெற்றோர்கள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளின் தந்தைக்கு 16 1/2 வருடமும் தாய்க்கு 12 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பு வழங்கிய பிறகு “குழந்தைகளை காப்பகத்தில் அனுமதிக்கலாம். இதனிடையே பத்து வருடங்களுக்கு முன்பே குழந்தைகள் பட்டினியாக பள்ளிக்கு வருவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தகவலை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை புரிகின்றது. இதனால் அதிகாரிகள் மேலும் தவறு இருக்கிறது” என நீதிபதி கூறியுள்ளார்.

Categories

Tech |