Categories
தேசிய செய்திகள்

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமான மகள்… கழுத்தை நெறித்து கொலை செய்த பெற்றோர்..!!

ஜோகுலாம்பா அருகே மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமாக இருப்பதையறிந்த பெற்றோர் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டம் ஜோகுலாம்பா பகுதியை சேர்ந்த 20 வயதுடைய திவ்யா என்பவர் ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு காலேஜில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் விதிக்கப்படுவதற்கு 2  நாட்களுக்கு முன்பு வீட்டுக்குச் சென்ற அவர் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களாக திவ்யா கடும் வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்ததையடுத்து, அவரது பெற்றோர் மகளை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், திவ்யா கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனைக்கேட்டு பேரதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே கருவை கலைக்க வேண்டும் என திவ்யாவிடம் கூறியுள்ளனர்.

ஆனால், அதற்கு திவ்யா மறுப்பு தெரிவித்து, தான் காதலிக்கும் இளைஞருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த அவரது பெற்றோர், வேறு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு திவ்யாவை திருமணம் செய்து கொடுக்க மனமில்லாமல் இந்த விவகாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர நினைத்தனர். அதாவது திவ்யாவை கொலை செய்ய முடிவெடுத்தனர்..  அதனைத்தொடர்ந்து திவ்யா நன்கு தூங்கிக் கொண்டிருந்தசமயம் தலையணையால் முகத்தை மூடி, கழுத்தை நெரித்து அவரது பெற்றோர் கொலைசெய்துவிட்டனர் .

இதையடுத்து திவ்யா மாரடைப்பால் பலியானதாக உறவினர்களிடம் கூறி விட்டனர்.. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், திவ்யா வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர்.. இறுதியில் அவர்கள் தங்களது மகளை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்களை கைதுசெய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமான மகளை பெற்றோர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |