Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடனே புறப்படுங்கள்…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. இதை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்….!!

கன்னியாகுமரியில் ஊரடங்கின்போது காவல்துறையினரால் பறிமுதல் செய்த வாகனங்களை உரிமையாளர்களிடம் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த சோதனையில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 நாட்களில் ஊரடங்கின்போது சுற்றிதிரிந்தவர்களின் மொத்தம் 3,360 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களது  3,323 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல் முதலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த உரிமையாளர்களிடம் கொடுப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து நாகர்கோவில் கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம், நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையினர்  உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆவணங்களை காவல்துறையினரிடம் காண்பித்து வாகனங்களை பெற்றுச் செல்கின்றனர்.

Categories

Tech |