பெருவில் குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை உருக்கி உடற்பயிற்சி சாதனங்கள் செய்யப்பட்டது.
பெரு நாட்டில் பறிமுதல் செய்த துப்பாக்கிகளை உருக்கி அதன் மூலமாக சீசாக்கள், மங்கி பார் போன்ற உடற்பயிற்சி கருவிகள் செய்யப்பட்டது. இதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த உடற்பயிற்சி சாதனங்கள் குற்ற சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட பல்வேறு வகையான துப்பாக்கிகளை உள்ளூர் ஆலையின் உதவியுடன் உருக்கி, அதில் இதுபோன்று தயாரித்துள்ளனர். இவ்வாறு தயார் செய்யப்பட்ட உடற்பயிற்சி கருவிகள் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.