Categories
கிரிக்கெட் விளையாட்டு

பறிபோன விராட் கோலியின் பதவி ….ஒருநாள் அணியின் கேப்டனானர் ரோஹித் சர்மா….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு டி20 கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார் .அதோடு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட  இருப்பதாக தகவல் வெளியாகியது. அதேசமயம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது .இந்நிலையில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக தேர்வுக்குழு நியமித்துள்ளது.

Categories

Tech |