கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலகளவில் அங்கீகாரம் கொடுப்பதற்கு பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தன்னுடைய இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்சின் சென்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் பாரத் பயோடெக் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இதற்கிடையே இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த கோவேக்சின் தடுப்பூசியை உலகளவில் அவசர காலமாக பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த கோவேக்சின் தடுப்பூசியை உலகளவில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்த உரிமத்தை பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.